ரெயில்வே பட்ஜெட்டில் குமரி மாவட்டத்துக்கு ஏமாற்றமே தொடர்கதையாக உள்ளது: பயணியர் சங்கம் அதிருப்தி
09-07-2014
கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே பயணியர் சங்க செயலாளர் எட்வர்ட் ஜெனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ரெயில்வே பட்ஜெட்டில் குமரி மாவட்டத்துக்கு ஏமாற்றமே தொடர்கதையாக உள்ளது. நாகர்கோவில் வரை நீட்டிக்க கோரிய திருச்சி-நெல்லை இண்டர்சிட்டி ரெயில் நீட்டிக்கப்படவில்லை.
எட்வர்ட் ஜெனி |
நாகர்கோவில்-காச்சுகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி ரெயிலாக அறிவிக்கப்படவில்லை. கன்னியாகுமரி – மதுரை இடையே ரெட்டை ரெயில்பாதை அறிவிக்கப்படவில்லை. திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி இயங்குவதாக அறிவிக்கப்படவில்லை. புதிய ரெயில் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
இதுபோல பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் தனிக்கோட்டம் அல்லது குமரி மாவட்ட ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்துடன் இணைப்பு என்ற கோரிக்கையும் பபுறம தள்ளப்பட்டு உள்ளது. எனவே இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளது. குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதை நினைக்கும்போது வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கூற்று உண்மையாகவே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Railway News