மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
08-07-2014
முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பு கடைபிடிக்கும் மாதம் இஸ்லாமிய ஹிஜ்ரி வருட ரமலான் மாதம் ஆகும். இந்த மாதம் முதல் தேதி ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் துவங்கியது. இந்த மாதம் 28-ம் தேதி வரை நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. ஜூலை 29-ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. தற்போது இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
மணவாளக்குறிச்சி பகுதி இஸ்லாமியர்கள் மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் தினமும் மாலை சுமார் 6.40 மணி அளவில் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இங்கு மணவாளக்குறிச்சி பகுதி இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, அருகில் உள்ள கல்லூரிகளில் பயிலும் கேரள மற்றும் வெளியூர் மாணவர்கள் கலந்து கொண்டு நோன்பு திறக்கிறார்கள்.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் முக்கிய உணவாக “நோன்பு கஞ்சி” தயாரிப்படுகிறது. இதனை முஸ்லிம் முஹல்லம் சார்பில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது

Post a Comment

Previous News Next News