மண்டைக்காடு புதூரில் கோஷ்டி மோதல்: போலீஸ் குவிப்பு

மண்டைக்காடு புதூரில் கோஷ்டி மோதல்: போலீஸ் குவிப்பு
23-07-2014
மண்டைக்காடு புதூர் மீனவ கிராமத்தில் இருகோஷ்டிகளாக இருந்து வந்தனர். இதனால் அன்பியத்தேர்தல் கடந்த ஒரு வருடமாக நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 20–ம் தேதி ஊரில் உள்ள 27 அன்பியத்திற்கும் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது சிறிய பிரச்சினைகள் இருந்து வந்தது. இதில் அசம்பாவிதங்கள் வராமலிருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
தேர்தலில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இரு கோஷ்டியினரும் சில உறுப்பினர்களை தங்கள் வசம் வைத்துள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக இரு கோஷ்டியினரும் மோதும் நிலை உருவாகியுள்ளது. வருகிற 27–ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பிய உறுப்பினர்கள் வாக்களித்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கு முன்பாக கோஷ்டி மோதல் உருவாகும் வாய்ப்பு உள்ளதால் அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

Post a Comment

Previous News Next News