மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாய் பூஜை நடந்தது
23-07-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், சாயரட்சை பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், சிறப்பு பூஜை ஆகியன நடந்தது.
மாலை 6 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து அத்தாழ பூஜையும் நடந்தது. கோவிலில் காலையில் இருந்தே பகதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பகதர்கள் கடலில் கால் நனைத்துவிட்டு பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்


