மணவாளக்குறிச்சி, பரப்பற்று பகுதியில் சிறுமின்விசை திட்ட குடிநீர் குழாய் திறப்பு 
21-07-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மண்டைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பரப்பற்று பகுதியில் அரசமூடு நிழல் தாங்கள் அருகில் சிறுமின்விசை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு, மின்மோட்டார் மற்றும் குடிநீர் குழாய் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது.
இதனை மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன் திறந்து வைத்தார். துணைத்தலைவர் ஜெகன் சந்திரகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பரப்பற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கமணி, இயக்குனர் அன்னக்கிளி, ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  
Tags:
Manavai News



