மணவாளக்குறிச்சியில் மணல் கடத்த முயன்ற டெம்போ பறிமுதல் 
21-07-2014
மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று காலையில் மணவாளக்குறிச்சி, பரப்பற்று பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மணவாளக்குறிச்சி மணல் ஆலையின் கழிவு மணலை டெம்போவில் ஒரு கும்பல் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. 
இதனை தொடர்ந்து போலீசார் அருகில் சென்று பார்த்தபோது அந்த கும்பல் மணல் கடத்த முயன்றது தெரியவந்தது. உடனே போலீசார் மணலுடன் டெம்போவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து டெம்போவை கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  
Tags:
Manavai News



