மண்டைக்காட்டில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா
13-07-2014
மண்டைக்காட்டில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா பருத்திவிளை அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். கல்குளம் தனித்துணை வட்டாட்சியர் கோலப்பன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆவின் பால் வளத்தலைவர் அசோகன், மாவட்ட துணைச்செயலாளர் திலக், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணைத்தலைவர் எரோணிமூஸ், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மண்டைக்காடு பேரூராட்சி துணைத்தலைவர் ஜெகன் சந்திரகுமார், வார்டு உறுப்பினர்கள் ஜெயசேகரன், நாகராஜன், சிவகாமி, பேரவை குருந்தன்கோடு ஒன்றிய துணைச்செயலாளர் விஜயகுமார், குளச்சல் வருவாய் ஆய்வாளர் நாகேஸ்வரி, மண்டைக்காடு கிராம நிர்வாக அதிகாரி தாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்