மணவாளக்குறிச்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
13-07-2014
மணவாளக்குறிச்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை குமரி மாவட்ட ஆவின் பாலகமும், மணவாளக்குறிச்சி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமும் இணைந்து நடத்தியது.
மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தில் வைத்து இந்த முகாம் நடந்தது. இதில் கால்நடைகளுக்கான மலட்டுத்தன்மை மற்றும் குடற்புழு நீக்குதல் ஆகிய சிகிட்சைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமிற்கு மாவட்ட பால்வள தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். ஆவின் பொது மேலாளர் லட்சுமணபிள்ளை, மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணவாளக்குறிச்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
முகாமை வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் தொடங்கி வைத்து பேசினார். ஆவின் டாக்டர்கள் செய்யது ரிச்சாஸ், வருண்குமார், ஆக்னதா, அதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் அம்பிளிகலா, ஏரோணிமூஸ், பஷீர் உசேன், சேமக்கண் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் ராதாபாய் நன்றி கூறினார்.
Tags:
Manavai News