முட்டம் கடலில் ஜவுளி வியாபாரி மூழ்கி பலி
15-07-2014
நாகர்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 40). ஜவுளி வியாபாரி. இவருடைய சொந்த ஊர் கரூர் மாவட்டம் பரமத்தி ஆகும். இவர் 15 ஆணடுகளுக்கு முன் நாகர்கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து வசித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் ஜவுளிகளை எடுத்து ஊர், ஊராக விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் முட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைவேலு, 2 நண்பர்களுடன் கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சி முடிந்து, முட்டம் கடலுக்கு சென்றார். பின்னர் 3 பேரும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதத்தில் குழந்தைவேலு கடலில் மூழ்கி, உயிருக்கு போராடியதாக தெரிகிறது.
உடனே அருகில் இருந்த நண்பர்கள் 2 பேரும் அவரை காப்பாற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து குளச்சல் கடலோர காவல்படை போலீசில் குழந்தைவேலுவின் மனைவி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்