மணவாளக்குறிச்சியில் இயலா குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

மணவாளக்குறிச்சியில் இயலா குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
11-07-2014
இயலா குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் மணவாளக்குறிச்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட 70–க்கும் மேற்பட்ட இயலா குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி முருகன், உதவி திட்ட அதிகாரி மெசியாதாஸ், குடும்ப நலத்துறை இணை இயக்குனர் முகமது சலாவுதீன், மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜோஸ்பின் ரீட்டா, பள்ளி தலைமை ஆசிரியர் வில்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ரீனா கனகஜாய் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

Post a Comment

Previous News Next News