ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த கிராமத்துப் பெண்

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த கிராமத்துப் பெண்
21-06-2014
கன்னியாகுமரி அருகே உள்ள ஏழுசாட்டுப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவரது 2-வது மகள் சுப்பிரியா. இவர் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் படித்தார். பின்னர் பயோ மெடிக்கல் படிப்பை உதயா கல்லூரியில் படித்து முடித்தார். படிக்கும்போதே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்து வந்த சுப்பிரியா, சென்னை சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை நடத்தும் ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையத்தில் சேர்ந்து போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் உள்துறை சார்ந்த அதிகாரிப்பணி கிடைத்து பயிற்சிக்கு பின்னர் உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அதன்பின்னரும் முயன்று படித்து தற்போது நடந்து முடிந்த ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் அவர் தான் பிறந்த கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற சுப்பிரியாவின் தந்தை பொன்னம்பலம் விவேகானந்தா கேந்திராவில் தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தாயார் கலா. மூத்த சகோதரி ஒரு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இளைய சகோதரி சைதை துரைசாமி ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous News Next News