மணவாளக்குறிச்சி, பெரியகுளத்தில் மூழ்கி பாதிரியார் சாவு

மணவாளக்குறிச்சி, பெரியகுளத்தில் மூழ்கி பாதிரியார் சாவு
19-06-2014
சென்னையை சேர்ந்த லாரன்ஸ் (வயது 33) என்பவர் மதுரையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ள ஒரு கூட்டத்தில் பங்கேற்க லாரன்சும், லூர்து, ஹீலன் ஆகிய பாதிரியார்களும் மணவாளக்குறிச்சி அருகே உள்ள படர்நிலம் பகுதிக்கு வேறு சில பாதிரியார்களை சந்திக்க வந்தனர்.

பின்னர், லாரன்ஸ், லூர்து, ஹீலன் ஆகிய 3 பாதிரியார்களும் நேற்று காலை அருகில் உள்ள பெரியகுளத்திற்கு குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்த லாரன்ஸ் குளத்தில் மூழ்கி மாயமானார். உடன் சென்ற மற்ற இரு பாதிரியார்களும் அவரை தேடினர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.
உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குளச்சல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பாதிரியாரை மீட்டனர். ஆனால் அவர் இறந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Post a Comment

Previous News Next News