அ.தி.மு.க.கட்சியினருக்கு புதிய அடையாள அட்டையை தமிழ்மகன்உசேன் வழங்கினார்
18-06-2014
அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதில் புதிய உறுப்பினராக சேர விண்ணப்பித்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 9 ஒன்றியம் மற்றும் 4 நகர பகுதிகளுக்கு முதல்கட்டமாக 2¼ லட்சம் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், மயிலாடி, மருங்கூர், தேரூர், சுசீந்திரம் ஆகிய 10 பேரூராட்சி பகுதிகளுக்கும், கோவளம், லீபுரம், பஞ்சலிங்கபுரம், மகாராஜபுரம், கரும்பாட்டூர், சாமிதோப்பு, வடக்கு தாமரைகுளம், குலசேகரபுரம், நல்லூர், இரவிபுதூர், தேரேகால்புதூர் ஆகிய 12 ஊராட்சி பகுதிகளுக்கும் அ.தி.மு.க புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது.
இந்த புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது. இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், குமரி மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளருமான தமிழ்மகன்உசேன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை கன்னியாகுமரி நகர அ.தி.மு.க செயலாளர் வின்ஸ்டனிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தம்பித்தங்கம், குமரி கிழக்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் ஜெ.ஜெ.ஆர்.ஜஸ்டின், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் எழிலன், மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் கைலாசம், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் லீன், ஒன்றிய எம்.ஜிஆர் மன்ற துணை செயலாளர் சந்தையடிதங்கராஜ், கன்னியாகுமரி பஞ்சாயத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
District News