நாகர்கோவிலில் இந்து முன்னணி சார்பில் மதமாற்ற எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது

நாகர்கோவிலில் இந்து முன்னணி சார்பில் மதமாற்ற எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது
17-06-2014
குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அடங்கிய நெல்லை மண்டல இந்து முன்னணி சார்பில் மதமாற்ற எதிர்ப்பு மாநாடு நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்தது.
இந்து முன்னணி மாநில தலைவர் டாக்டர் அரசுராஜா தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன், நெல்லை மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பாலகிருஷ்ண சாமி, சிவகுமார், தங்கவேல், ஆறுமுகச்சாமி, முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுவாமி சைதன் யானந்தஜி மகராஜ், ராமாநந்த ஜிமகராஜ் ஆகியோர் ஆசியுரையாற்றினர்.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் பேசினார். அவர் பேசும்போது, இந்து இளைஞர்கள் வரதட்சணை வாங்கமாட்டோம் என்று முடிவு எடுக்க வேண்டும். பெண் வீட்டில் பணம் வாங்குவதை இழிவாக நினைக்க வேண்டும். வரதட்சணையால் மதமாற்றம் நடப்பதை, இப்படித்தான் தடுக்க முடியும். எனவே, இந்த மாவட்டத்தை காக்க, இந்துக்கோவில் சொத்துகளை மீட்க, இருக்கிற சொத்துகளை பாதுகாக்க, துணிச்சல் மிக்க எந்த விலையும் கொடுக்க தயாராக உள்ள இளைஞர்கள் தேவை. என்றார்.
Photos "Puthiyapuyal" Murugan
Manavalakurichi

Post a Comment

Previous News Next News