மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம்
21-06-2014
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மதுரை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமில் மத்திய தொழிலாளர் கல்வி வாரிய கல்வி அதிகாரி அப்புக்குட்டன், விழிப்புணர்வு அதிகாரி அஜீஸ் ராஜ், ஒருங்கிணைப்பாளர் காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் 40 பெண்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலச்சட்டம், சமூக பாதுகாப்பு, குடும்ப நலம், மருத்துவ விழிப்புணர்வு, கேன்சர் பற்றிய கலந்தாய்வு, கைத்தொழில் பயிற்சி உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கல்வி அதிகாரி அப்புக்குட்டன் நம்மிடம் பேசும்போது, மதுரை மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் தென் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மக்களிடையே பல சமூக மேம்பாட்டு திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் கிளை சென்னை மற்றும் கோயம்புத்தூரிலும் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான சமூக நலன், கைத்தொழில் பயிற்சி உள்பட பல திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும் கலந்து கொள்பவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. என்று கூறினார்.
இந்த முகாம் ஏற்பாடுகளை நாகர்கோவில் சுரபி அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் செய்திருந்தார். கோடிமுனை கிளை நிர்வாகி ஜெயராணி பீட்டர் மேற்பார்வையில் முகாம் நடந்தது.
Tags:
Ladies Special