மணவாளக்குறிச்சி அருகே மீனவர் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே மீனவர் தற்கொலை
22-06-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவ கிராம அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் பங்கிராஜ் (வயது 47). மீன்பிடி தொழிலாளியான இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்துள்ளார். சிகிட்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பங்கிராஜ் சம்பவத்தன்று வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பங்கிராஜின் மனைவி ததேயூஸ்மேரி மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Post a Comment

Previous News Next News