ஓடும் பஸ்சில் பெயர் பலகை கழன்று விழுந்து மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் காயம்
22-06-2014
மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெ.சிம்சன் (வயது 61). இவர் மணவாளக்குறிச்சி கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் சிம்சன் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து குளச்சல் செல்லும் பேருந்தில் மணவாளக்குறிச்சி வருவதற்காக ஏறினார். பேருந்தில் கடைசி இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார்.
பெயர் பலகை வைக்கும் இடம் திறந்து உள்ளது |
பேருந்து எறும்புகாடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின் பக்க ஊர் பெயர் பலகை திடீரென கழன்று விழுந்தது. பெயர் பலகையின் விளிம்பு பகுதி சிம்சன் மூக்கிலும், அவர் அருகில் இருந்தவர் தோள் மீதும் விழுந்தது. இதில் சிம்சன் மூக்கு பகுதியில் பலகை விழுந்து இரத்தம் ஒழுகியது. உடனே நடத்துநர் ஆஸ்பத்திரிக்கு செல்ல சிம்சனை அழைத்தார். அதற்கு அவர், பரவாயில்லை மணவாளக்குறிச்சிக்கு சென்று மருந்து வைத்து கொள்வேன் என்று கூறினார்.
காயம் அடைந்த சிம்சன் (கம்பியை பிடித்திருப்பவர் |
குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே பல்வேறு விபத்துக்கள் நடந்து வருவதை காணமுடிகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து பழுதான பேருந்துகளை சரிசெய்தால் நன்றாக இருக்கும்.
Tags:
Manavai News