மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.1½ கோடி செலவில் திருப்பணிகள்
24-06-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 62 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. ரூ.30 லட்சம் செலவில் கோவில் முன்புறம் ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் பார்வையிட்டார். மேலும் ரூ.5 லட்சம் செலவில் கோவில் பின்புறம் கட்டப்படும் கலையரங்கம், ரூ.2 லட்சம் செலவில் திருவிளக்கு பூஜை அரங்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் காரவிளை செல்வன், அசோக்குமார், வக்கீல் முருகேஷ்வரன், அம்பிளி கலா, ஜான்சன், சட்டநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்