மணவாளக்குறிச்சி தருவை முருகன் திருக்கோவில் கொடைவிழா

மணவாளக்குறிச்சி தருவை முருகன் திருக்கோவில் கொடைவிழா
13-06-2014
மணவாளக்குறிச்சி தருவை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் திருக்கோவில் கொடைவிழா 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு இளைஞர் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், வழுக்குமர போட்டி மற்றும் பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி, மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 அன்னதானம், இரவு 8 மணிக்கு பரிசு வழங்குதல், தொடர்ந்து சிறுவர், சிறுமியருக்கான கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
11-ம் தேதி நடைபெற்ற விழாவில் காலை 8.30 மணிக்கு சின்னவிளை கடலில் விசாகம் குளித்தலும், மேளதாளம் மற்றும் சிங்காரி மேளத்துடன் கும்பம் எடுத்து வரப்பட்டது. மதியம் 12.30 அன்னதானம், மதியம் 2.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மாலை 6.30 மணிக்கு பரிசு வழங்குதல், இரவு 8 மணிக்கு புதிய உதயம் திரைப்பட மெல்லிசை குழுவினரின் மெல்லிசை விருந்து ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.




News and Photos
Manavai Murugan

Post a Comment

Previous News Next News