மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியில் கடல் சீற்றம்
13-06-2014
குமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. தேங்காய்பட்டினம், இனையம், புத்தன்துறை, முள்ளூர்துறை, குளச்சல், இராஜாக்கமங்கலம் போன்ற கடல் பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது.
கடல் அலை குருசுபாறை தாண்டி வருவதை காணலாம் |
குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்தினால், மீனவர்கள் கடலுக்கு கடந்த சில நாள்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் மணவாளக்குறிச்சி சின்னவிளை கடல் பகுதியில் அலையின் சீற்றம் மிக கடுமையாக இருக்கிறது. ஆக்ரோஷமாக வரும் அலை சின்னவிளை குருசு பாறையை தாண்டி வருவதை காணமுடிகிறது. கடற்கரை பகுதியில் உள்ள மணற்பரப்பை முழுவதுமாக நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் தங்களது கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்கள் போன்றவற்றை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தியுள்ளனர். மீன் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:
Manavai News