மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி, வேல்காவடி எடுத்து பக்தர்கள் சென்றனர்

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி, வேல்காவடி எடுத்து பக்தர்கள் சென்றனர்
01-06-2014
மணவாளக்குறிச்சி யானையை வரவழைத்த பிள்ளையார் கோவில் திருப்பணிக்குழு மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய 3-ம் ஆண்டு காவடிகட்டு விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் கணபதி ஹோமம், தீபாராதனை, சமய மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு செந்தூர் முருகன் திருப்பணிக்குழு தலைவர் துளசி தலைமை தாங்கினார். சுவாமி கருணானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
2-ம் நாள் நிகழ்வில் நையாண்டி மேளம், வேல்தரித்தல், அன்னதானம், காவடி அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. 3-ம் நாள் விழாவான நேற்று யானையை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் மணவாளக்குறிச்சி பகுதியிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
மாலையில் செண்டை மேளம் முழங்க கோவிலில் இருந்து பறக்கும் காவடி, வேல்காவடி, சூரியகாவடி, புஷ்பகாவடிகள் எடுத்து பக்தர்கள் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனர். விழா ஏற்பாடுகளை செந்தூர் முருகன் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.



போட்டோஸ்
"புதியபுயல்" முருகன்

Post a Comment

Previous News Next News