மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.30 லட்சம் செலவில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.30 லட்சம் செலவில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்
01-06-2014
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் பெண்களின் சபரி மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. பல சிறப்பம்சம்களை கொண்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்து வந்தது.

தற்போது ரூ.30 லட்சம் செலவில் கோவில் முகப்பில் ராஜகோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிக்கு கே.டி.பச்சைமால் எம்.எல்.ஏ. கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆகமவிதிப்படி 39½ அடி ராஜகோபுரம் அமைக்கப்பட உள்ளது.

மேலும் ரூ.15 லட்சத்தில் கொடிமரம் புதுப்பித்தல், ரூ.3 லட்சம் செலவில் வெள்ளி வாகனம் பழுது பார்த்தல், ரூ.3 லட்சம் செலவில் கருவறை மேற்கூரை சீரமைத்தல், ரூ.4 லட்சத்தில் சுற்றுசுவர் அமைத்தல், ரூ.10 லட்சத்தில் மூலஸ்தான வெளிபக்க சுவர் அமைத்தல், ரூ.10 லட்சத்தில் கற்பகிரகத்தில் செம்பு வலை அமைத்தல் உள்பட 32 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணிகளை 6 மாத காலத்திற்குள் முடிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous News Next News