மணவாளக்குறிச்சியில் மீன் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மீன் விற்பனை செய்ததால் பரபரப்பு

மணவாளக்குறிச்சியில் மீன் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மீன் விற்பனை செய்ததால் பரபரப்பு
30-06-2014
மணவாளக்குறிச்சியில் மீன், காய்கறிகள் மற்றும் பழவகைகள் சந்திப்பு பகுதியில் உள்ள அந்தி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வியாபாரிகளிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தீர்வை (கட்டணம்) வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை பேரூராட்சியினால் குத்தகைக்கு விடப்பட்ட நபர் மூலம் வசூலிக்கப்படுகிறது.
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மீன் விற்பனை
செய்யும் வியாபாரிகள்
இந்நிலையில் இன்று காலையில் மணவாளக்குறிச்சி அந்தி சந்தையில் மீன் வியாபாரிகள் மீன்களை விற்பனை செய்யாமல் திடீரென பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மீன்களை விற்பனை செய்ய முற்பட்டனர். இதற்கான காரணம் கேட்டபோது, அந்திசந்தையில் மீன் வியாபாரிகளிடம் ஒரு குறிப்பிட்ட அளவு விற்பனை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பழைய கட்டணத்தில் இருந்து அதிகப்படியான கட்டணம் செலுத்த வற்புறுத்தப்படுகிறது. இது சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு செலுத்தமுடியாத சூழ்நிலையில் இருக்கிறது. இதை கண்டித்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் விற்பனை செய்வதாக மீன் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து ஓரளவு சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மீன் வியாபாரிகள் மீண்டும் மணவாளக்குறிச்சி சந்திசந்தையில் மீன்களை விற்பனை செய்ய கொண்டு சென்றனர். இதனால் காலையில் மணவாளக்குறிச்சி பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Post a Comment

Previous News Next News