மணவாளக்குறிச்சி பகுதியில் புதிய ரேஷன் கடை
பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
01-07-2014
குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் மணவாளக்குறிச்சி பெரியகுளம் சந்திப்பில் ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கினார். அதன்படி புதிய ரேஷன்கடை பெரியகுளம் பகுதியில் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா தலைமை தாங்கினார். குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.டி.உதயம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜசேகர், பேரூராட்சி துணைத்தலைவர் குட்டிராஜன், ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வார்டு உறுப்பினர் ஸ்ரீகுமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். சுபா முருகன் நன்றி கூறினார்.
Tags:
Manavai News