மணவாளக்குறிச்சியில் பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிப்பு

மணவாளக்குறிச்சியில் பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிப்பு
30-06-2014
மணவாளக்குறிச்சி சின்னவிளை செல்லும் சாலையில் ஒரே காம்பவுண்டில் தபால் நிலையம், அங்கன்வாடி மையம், பேரூராட்சி அலுவலகம், பொது நூலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
புதிய பேரூராட்சி அலுவலகத்தின் முன் இருந்த கிராம
நிர்வாக அலுவலகம் இடிக்கப்படும் காட்சி
இங்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகம் பழைய ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த ஓட்டு கட்டிடத்தின் பின் பகுதியில் புதிதாக பேரூராட்சி அலுவலக அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு, அதில் பேரூராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. மேலும் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம், தபால் நிலையம் அருகில் கட்டப்பட்டு வந்தது. புதிய கிராம நிர்வாக அலுவலக இடத்தில் முன்பு பழைய பொது நூலகம் இயங்கி வந்தது.
புதிய கிராம நிர்வாக அலுவலக
கிராம நிர்வாக அலுவலகம் தற்போது, புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் பேரூராட்சி அலுவகம் முன் இருந்த பழைய கிராம நிர்வாக அலுவலக ஓட்டு கட்டிடம் தற்பொழுது இடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு பழைய கிராம நிர்வாக அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள புதிய பேரூராட்சி அலுவலகம் முழுமையாக நுழைவாயிலேயே தெரிகிறது.

Post a Comment

Previous News Next News