நாகர்கோவிலில் அரசு பேருந்து மோதி நகைதொழிலாளி மரணம்: போக்குவரத்து கழகத்தை கண்டித்து மாபெரும் தர்ணா
28-05-2014
கடந்த 24-ம் தேதி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து மீனாட்சிபுரம் வந்து கொண்டிருந்த பேருந்து பிரேக் பிடிக்காமல் ரோட்டோரத்தில் நின்ற பொதுமக்களை இடித்துவிட்டு, கடையில் புகுந்து நின்றது. இதில் நகைதொழிலாளி ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மற்றொருவர் கால் துண்டான நிலையில் படுகாயம் அடைந்தார்.
இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் மிகபழுதான பேருந்துகள் தான் காரணம் எனக்கூறி இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கன்னியாகுமரி மாவட்ட நகைத் தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ரவியின் அகால மரணத்திற்கு நியாயம் கேட்டு மாபெரும் தர்ணா போராட்டம் நடந்தது.
இந்த தர்ணா போராட்டம் உயிரை பறிக்கும் காலாவதியான பேருந்துகளை குமரி மாவட்டத்தில் இயக்குவதை தடை செய்யவும், உயிரை பறிகொடுத்து வாடும் நகைத் தொழிலாளி ரவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ருபாய் நிதி வழங்கிடவும், ஆதரவற்ற நிலையில் நிற்கும் ரவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்தும் நடத்தப்பட்டது.
இந்த தர்ணா போராட்டத்திற்கு நகைத்தொழிலாளர் பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெலஸ்டின் தலைமை தாங்கினார். , துணைத்தலைவர் நாகலிங்கம், பொதுசெயலாளர் பெருமாள், செயலாளர்கள் ரெகுபதி, சி.சுப்ரமணியன், செல்வகுமார், பி.சுப்ரமணியன், பரமசிவம், பொருளாளர் நயினார், சிபிஎம் வட்டார செயாளர் எஸ்.அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
"புதியபுயல்" முருகன்,
மணவாளக்குறிச்சி
செய்தி மற்றும் போட்டோஸ்
"புதியபுயல்" முருகன்,
மணவாளக்குறிச்சி
Tags:
District News