நாகர்கோவிலில் தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

நாகர்கோவிலில் தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
28-05-2014
கழக நிரந்தரப் பொதுசெயலாளரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான டாக்டர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், அதிமுக கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான அ.தமிழ்மகன் உசேன் மகன் ஷாநவாஸ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி எஸ்.இக்பால் மகள் கதிஜத்துல் ரிஸ்வானா ஆகியோர் திருமணம் இம்மாதம் 19-ம் தேதி சென்னை ராயப்பேட்டை நியூகாலேஜ் ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
மணமக்கள், தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம்
ஆசி பெற்ற காட்சி
இத்திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பல முக்கிய பிமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணவாளக்குறிச்சி
கூட்டுறவு சங்க தலைவர் எம்எஸ்எம். பஷீர்,
"மணவை இன்ஃபோ" சலீம், புதிய புயல் முருகன் 
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தமிழ்மகன் உசேன் வரவேற்றார். கேரளா மாப்பிள்ளை பாட்டு மகளிர் குழுவினரின் ஆடல் நிகழ்ச்சியும், தொடர்ந்து இஸ்லாமிய பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Post a Comment

Previous News Next News