மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது களப பவனி சென்றது

மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது களப பவனி சென்றது
06-03-2014
மனடைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த 2-ம் தேதி துவங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5-ம் நாள் திருவிழாவான இன்றைய நிகழ்ச்சிகளை மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை தொழிலாளர்கள் உபயமாக வழங்கினர்.
மாலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சியில் இருந்து யானை மீது களப பவனி சென்றது. இந்த பவனியில் செண்டைமேளம், சிலம்பாட்டம் மற்றும் களறி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. ஏராளமான பக்தர்கள் சந்தன குட ஊர்வலம் சென்றனர்.
மாலை 7 மணி அளவில் பவனி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து மாநாட்டு பந்தலில் சமய மாநாடு நிகழ்ச்சி நடந்தது. மாநாட்டில் கடலூர் மாவட்டம் எஸ்;கே.வைத்தியநாதன், ராஜபாளையம் வெள்ளத்துரை குமரி ரமேஷ் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு வழங்கினர். நிகழ்ச்சியை எஸ்.செல்வராஜ் தொகுத்து வழங்கியதுடன் வரவேற்பு உரையும் வழங்கினார்.தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.



போட்டோஸ்
மணவை முருகன்
புதியபுயல்

1 Comments

Previous News Next News