மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது – தமிழக, கேரள அமைச்சர்கள் கலந்து கொண்டார்

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது – தமிழக, கேரள அமைச்சர்கள் கலந்து கொண்டார்
02-03-2014
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் ஆகும். கோவில் திருவிழா மார்ச் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி முடிய நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்
கே.டி.பச்சைமால், பிஜேபி தலைவர் போ.இராதாகிருஷ்ணன்,
நாகர்கோவில் நகராட்சி தலைவி மீனாதேவ்
கொடியேற்று நிகழ்ச்சியில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், கேரள மாநில சுகாதாரம் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார், தமிழக பிஜேபி தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தாஜி மஹாராஜ், நாகர்கோவில் நகராட்சி தலைவி மீனாதேவ், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜ், சிவகுற்றாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொடியேற்று நிகழ்ச்சியை தொடர்ந்து மாநாட்டு பந்தலில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

Post a Comment

Previous News Next News