மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி பவனி சென்றது
06-02-2014
மணவாளக்குறிச்சி யானையை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை பக்தர்கள் குழு நடத்திய 25-ஆம் வருட மாபெரும் காவடி பவனி சென்றது.
யானையை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் காவடி பவனி அன்று (6-ஆம் தேதி) காலை 8 மணிக்கு காவடி அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு வேல்தரித்தல் மதியம் 12 மணிக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலை 4.30 மணி அளவில் புஷ்பகாவடி, வேல் காவடி, பறவை காவடி, சூரிய வேல் காவடி, ஆறுமுக வேல் காவடி, அக்னி காவடி, கதிர்வேல் காவடி போன்ற காவடிகளும், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பட்டை, கெம்பு மேளம் முழங்க காவடிகள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.
போட்டோஸ்
புதியபுயல் முருகன்
மணவாளக்குறிச்சி
நண்பர் முருகன் அவர்களுக்கு நன்றி
ReplyDelete