மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
14-02-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் வளனார் காலனியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் லூர்து ராஜேஸ்வரி (வயது 21). இவர் அம்மாண்டிவிளை அருகே உள்ள ஒரு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு 2 நாட்களாக தாமதமாக வந்துள்ளதாக தெரிகிறது. இதை விஜயன் தட்டிகேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த லூர்து ராஜேஸ்வரி நேற்று காலை குளியலறைக்கு சென்று பூட்டிக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.
அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லூர்து ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Post a Comment

Previous News Next News