அகில இந்திய மக்கள் நலக்கழகம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது
28-01-2014
நாகர்கோவில் சுசீந்திரம் அருகே உள்ள அச்சன்குளம் பகுதியில் உள்ள மனோலயா மறுவாழ்வு மையத்தில் அகில இந்திய மக்கள் நலக்கழகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராபின்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், சுசீந்திரம் கிளை தலைவர் முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் முகம்மது ராபி இனிப்பு வழங்கினார்.
மாவட்ட அமைப்பாளர் (வட்டாட்சியாளர் ஓய்வு) ஜனார்த்தனன் கொடியேற்றினார். மாநில தலைவர் சிவகுமார், மாநில துணை தலைவர் கண்ணன் ஆகியோர் மாற்று திறனாளிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் புதியபுயல் நிருபர் மணவை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
“புதியபுயல்” முருகன்
Tags:
District News