மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் 100 அடி உயர கோபுரத்தில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்

மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் 100 அடி உயர கோபுரத்தில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்
31-01-2014
மணவாளக்குறிச்சியில் உள்ள அரிய மணல் ஆலையில் செல்வராஜ் (வயது 59) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பகல் 3 மணிக்கு வேலைக்கு வந்தார். அன்று இரவு 9 மணி அளவில் ஆலையில் உள்ள 100 அடி உயர கோபுரத்தில் ஏறி, தனக்கு உரிய சீனியாரிட்டி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு, ஆலை ஊழியர்கள் குவிந்தனர்.

உடனே இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குளச்சல் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர்.
செல்வராஜுடன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை செல்போனில் பேசினார். செல்வராஜ் தனது கோரிக்கையை நிறைவேற்றனால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என்று கூறினார். அவரது கோரிக்கையை ஆலை நிர்வாகத்திடம் கூறி, நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் கூறினார்.

அதனை ஏற்று கொண்ட செல்வராஜ் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

Post a Comment

Previous News Next News