கடியப்பட்டணம் (இருப்பு மணவாளக்குறிச்சி) அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

கடியப்பட்டணம் (இருப்பு மணவாளக்குறிச்சி) அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
26-01-2014
மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள கடியப்பட்டணம் அரசு தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற குழுத்தலைவர் மற்றும் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளி வளாகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு விருந்தினர் ஜஸ்டின் செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்து பள்ளி மாணவ, மாணவியரிடம் குடியரசு தினத்தின் சிறப்பு குறித்தும், கல்வியின் முக்கியத்தும் பற்றியும் பேசினார். பள்ளி தலைமையாசிரியர் லிற்றில் பிளவர் வரவேற்று பேசினார். மணவாளக்குறிச்சி பள்ளிவாசல் முஹல்ல தலைவரும் வணிகர் சங்க தலைவருமான பஷீர் சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் சீபா, பள்ளி ஆசிரியைகள் அற்புதமேரி, மரியாகோல்ட், மரியதங்கம், சகாயதெரஸ், கலா, கில்டா, பேபி ஜான்சிராணி மற்றும் கணினி ஆசிரியர் ஜெப பிரமிளா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Post a Comment

Previous News Next News