மணவாளக்குறிச்சியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சியில்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
28-11-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சகாயமாதா காலனியை சேர்ந்தவர் பனிதாசன். இவரது மகள் சிந்துஜா மினி (வயது 19). இவர் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று இருந்தனர். அப்போது சிந்துஜா மினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மனக்குழப்பத்தில் இருந்த அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணவாளக்குறிச்சி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 Comments

  1. பரிதாப மரணங்கள் என்று நிற்கும்.

    ReplyDelete
Previous News Next News