மணவாளக்குறிச்சியில் பா.ஜனதா சார்பில் பெரியோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது

மணவாளக்குறிச்சியில்
பா.ஜனதா சார்பில் பெரியோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
28-11-2013
குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் ஒன்றியம் வாரியாக பெரியோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி குருந்தன்கோடு ஒன்றியம் சார்பில் மணவாளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பெரியோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முன்னிலை வகித்தார். மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் மணிகண்டன் வரவேற்றுப் பேசினார். மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். 
இதில் மாவட்ட பொதுசெயலாளர் குமரி ரமேஷ், செயலாளர் தங்கப்பன், மாநில மூத்தோர் பிரிவு துணைத்தலைவர் பொன்.ரத்தினமணி, மாவட்ட மகளிரணி தலைவி மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், பொருளாளர் பழனிவேல், மணவாளக்குறிச்சி பேரூர் தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மாநில கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Post a Comment

Previous News Next News