நடைமுறைப்படுத்தப்படுமா?
05-06-2013
குழந்தை தொழிலாளர்களை போக்க..அனாதை குழந்தை இல்லாமையாக்க..
நமது நாட்டில் குழ்ந்தை இல்லாமல் தினம், தினம் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். அரசு அலுவலகங்களில் பெண்கள் எண்ணிக்கையில் நடுநிலை வகிக்கிறார்கள். அதில் கருவுற்ற பெண்களுக்கு தனி சலுகைகள் வழங்கப்படுகின்றனர்.
News: Puthiyapuyal Murugan |
அதாவது குழந்தை பிறப்பதற்கு முன்பே குழந்தை பிறந்த பின்பு ஆறுமாதங்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது.ஆனால் கூடவே பணிபுரியும் குழந்தை இல்லாத பெண்களுக்கு எந்தவித சலுகையும் கிடையாது.
எனவே குழந்தையை தத்தெடுக்க முன்வரும் அரசு வேலையில் உள்ளவாக இருந்தாலும் சரி, எந்த தம்பதியரும் ஆனாலும் அவர்களுக்கு குழந்தை காப்பகத்தில் உள்ள குழந்தைகள் அல்லது அனாதை குழந்தைகள் அல்லது குழந்தை தொழிலாளர்கள் எவராக இருந்தாலும் சரி,குழந்தை இல்லாத தம்பதியருக்கு மேற்படி அரசு சலுகை வழங்கவேண்டும்.
அரசு சலுகைகள்
- குழந்தைக்கு அரசு காப்பீடு
- குழந்தை படிக்கும் வயதில் பள்ளியில் சிறப்பு சலுகைகள்
- அரசு வேலையில் படித்தவர்களுக்கு முன்னுரிமை
- அரசு கோரும் வேலைக்கு தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை
- குழந்தையை தத்தெடுக்கும் போது தத்தெடுக்கும் தம்பதியினரின் சாதிக்கேற்றவாறு அரசு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.
அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனத்தில் இருந்து குழந்தைகள் வழங்கினால் நமது நாட்டில் அனாதை குழந்தைகள் இருக்கமாட்டார்கள். குழந்தை தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள். குழந்தை இல்லை என ஏங்குபவர்கள் இருக்கமாட்டார்கள்.
இவைகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமா?
Tags:
Other News