மணவாளக்குறிச்சி பகுதியில் விடிய விடிய கொட்டிய மழை
01-06-2013
குமரி மாவட்டத்திற்கு அதிக அளவிலான மழை தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும். கேரளாவில் மழை சீசன் தொடங்கியதும் குமரி மாவட்டத்திலும் மழை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் 1 அல்லது 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த அறிகுறி காரணமாக குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் கடும் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலையில் இருந்து பெய்த மழை தொடர்ந்து, இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இன்று காலையிலும் மணவாளக்குறிச்சி பகுதியில் பரவலாக மழை பொழிந்தது. மழை நீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
மழை தண்ணீரில் தட்டுதடுமாறி செல்லும் முதியவர் |
மக்கள் நடக்கும் சில பாதைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் தத்தளித்து செல்வதை காணமுடிந்தது.
Tags:
மணவை செய்திகள்