அகல் விளக்கு சுடர் ஒளி

அகல் விளக்கு சுடர் ஒளி 
05-06-2013
ஏழை மக்கள் இருள் நேரத்தில் வெளிச்சத்திற்காக பயன்படுத்தப்படும் விளக்கு அகல்விளக்கு ஆகும். இருள் சூழ்ந்த நேரத்தில் அந்த அகல் விளக்கு ஆனது நல்ல வெளிச்சத்தை கொடுக்கும். 

சிறு பூச்சிகள் உணவு என சுடர் ஒளியை சுற்றிச்சுற்றி வரும்போது அப்படி அது அதன் மென்மையான இறகுகள் தீயில்பட்டு இறகுகளை இழந்து தரையில் விழுந்து இறந்துவிடும். இதுபோல வாழ்க்கை நடத்த தேவையான பணம் தேடி வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலையில் இருப்பவர்கள் தீ சுடர் போன்ற பணமுதலைகள், தாதாக்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சிலர் பண ஆசை என்ற ஒளியை பூச்சி போன்ற மக்களிடன் காட்டுவார்கள்.

News: Murugan
இந்த ஆசையை நம்பி அவர்கள் சொல்லும் காரியங்களை எல்லைக்குள் இருந்து, அதாவது சுடர் ஒளியின் வட்டத்தை சுற்றிசுற்றி வரும் பூச்சி போல, பல பாவங்களை செய்வார்கள். பாவகாரியங்கள் நெருப்பை போன்றது. அந்த நெருப்பானது முதலில் அவர்களின் இறக்கை போன்ற உறவுகளை சீரழித்து வடும். பின்னர் அவர்களையும் அழித்து விடும்.

Post a Comment

Previous News Next News