கடியப்பட்டணம்
தூய பேதுரு, பவுல் ஆலய திருவிழா
28-06-2013
கடியப்பட்டணம் தூய பேதுரு பவுல் ஆலய திருவிழா 20-06-2013 முதல் 29-06-2013 வரை 10 நாட்கள் நடந்து கொண்டிருக்கிறது.
ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் ஆலயம் |
திருவிழாவை முன்னிட்டு பங்கு பேரவை, பங்கு மக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகள் விடுத்துள்ள அழைப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அன்பை கொண்டாடி, மகிழ்வை பகிர்ந்து உவகையுடன் இறைபுகழ் பாடி, ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கும் இனிய தருணம் இது. கடியப்பட்டணம் தலத்திருசபையின் மக்கள் நாங்கள் எங்கள் பாதுகாவலர், திருச்சபையின் தூண்கள் என் வருணிக்கப்படும் புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் திருவிழாவை கொண்டாடி மகிழும் காலம் இது.
கண்ணின் மணியாய் எம்மை காத்து வாழ்வின் இன்ப துன்ப நிகழ்வுகளில் கனிவோடு உடன் நடந்து, வாழ்வில் சோர்ந்து வீழ்ந்து விடாமல், தட்டு தடுமாறிய தருணங்களிலும் உற்ற துணையாய் கரம்பிடித்து எங்களை வழிநடத்தி, பாதுகாத்து வாழ்வளித்து எங்கள் பாதுகாவலர்களின் அளப்பரிய செயல்களை நினைக்கின்றோம்! வியக்கின்றோம்!! மலைக்கின்றோம்!!!.
ஆலயத்தின் உட்புற தோற்றம் |
ஒரு தாயின் பிள்ளைகளாய் எம்மை ஒன்றிணைத்து, சொந்தம் கொண்டாடி உறவு வளர்த்த எம் பாதுகாவர்களுக்கு நாங்கள் விழா எடுத்து மகிழ்கின்றோம்.
நீங்களும் வாருங்கள் எங்கள் குடும்ப விழாவில் அக மகிழுங்கள் – எம் புனிதர்களின் ஆசீரை நிறைவாய் பெறுங்கள்”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்வும் தொடர்ந்து ஆடம்பர திருப்பலியும் நடந்தது. தினமும் மாலை 6 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி இரவு மாபெரும் கண்கவர் வாணவேடிக்கை நடைபெறுகிறது. 10-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும், இரவில் மாபெரும் இன்னிசை விருந்தும் நடக்கிறது.
செய்தி
புதிய புயல் முருகன்