மண்டைக்காடு ஸ்ரீபகவதி அம்மன் கோவில் முன்பு
ராமர் பாதம்பட்ட மிதவை கல்லை பகதர்கள் வணங்கி சென்றனர்
28-06-2013
இராமர் பாலத்தை பாதுகாக்க வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் வருகிற ஜூலை 7-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இராமேஸ்வரத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரம் இராமர் பாலத்தில் இருந்து இராமரின் பாதம் பட்ட மிதக்கும் கல்லை எடுத்து வரப்பட்டு புண்ணிய தலங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட இந்துமகா சபா நிர்வாகிகள் |
இந்த மிதவை கல்லானது குமரி மாவட்ட இந்துமகா சபா சார்பில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அருகில், சுசீந்திரம் தாணுமாலையன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட குமரி மாவட்ட முக்கிய புண்ணிய தலங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (28-06-2013) மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் முன்பு மிதவை கல்லை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் இராமர் பாலத்தை காக்கவேண்டி விழிப்புணர்வு கருத்துகளும் மக்களிடையே அறிவுறுத்தப்பட்டது. மக்கள் இராமரின் பாதம்பட்ட கல்லை தொட்டு வணங்கி சென்றனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இராமர் பால மிதவை கல் |
இந்நிகழ்ச்சியில் அகில பாரத இளைஞர் மன்ற மாநில தலைவர் மண்டைக்காடு டாக்டர் சுரேஷ் ராமன், மாநில செயலாளர் பொன் வெற்றிவேல் பெருமாள், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் சங்கர் பூஜாரி, குளச்சல் நகர தலைவர் கே.சங்கர், நாகர்கோவில் நகர துணைசெயலாளர் நகுலன் காந்தி, உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்