தக்கலை ஞானமாமேதை பீர்முஹம்மது சாஹிப் தர்ஹா ஆண்டு விழா – ஓர் அறிமுகம்

தக்கலை ஞானமாமேதை பீர்முஹம்மது சாஹிப் தர்ஹா ஆண்டு விழா – ஓர் அறிமுகம்
26-05-2013
ஞானமாமேதை ஷெய்கு பீர்முஹம்மது சாஹிப் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர். இவர் பல வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை ஊரில் வந்து எல்லா மக்களிடமும் அன்பாக பழகினார்.
தக்கலை ஞானமாமேதை தர்ஹாவின் தோற்றம்
இறைவனுக்கு தொண்டு செய்தும், இறையருள் பாடல்கள் பாடியும் நல்ல இறையருள் சிந்தனை பெற்றார். பீர்முஹம்மது அப்பாவுக்கு மூன்று சீடர்கள் இருந்தனர். அதில் ஒருவர் ஆசாரி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

பீர்முஹம்மது அப்பா எல்லா குழந்தைகளிடமும் பிரியமாகவும், அன்பாகவும் இருந்தார். பிள்ளைகளுடன் சேர்ந்து சிறு, சிறு விளையாட்டுகள் விளையாடி குழந்தைகளை மகிழ்விப்பார். ஒருநாள் பீர்முஹம்மது அப்பா அவர்கள் விளையாடி கொண்டிருக்கும்போது பிள்ளைகளிடம் ஒரு பள்ளைத்தை காட்டி, நான் இந்த பள்ளத்தில் படுத்து கொள்வேன், நீங்கள் பள்ளத்தை மணலால் நிரப்பி விட்டு வீட்டிற்கு சென்று விடுங்கள் என்றாராம்.

அவர் கூறியபடி பிள்ளைகள் செய்திருக்கிறார்கள். பீர்முஹம்மது அப்பா அந்த தக்கலை ஊரில் ஜீவசமாதி ஆனார். அவர் ஜீவசமாதி ஆன அந்த தக்கலை ஊரில் மக்கள் வந்து வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள். மக்கள் நல்ல மனஅமைதியும், மனநிம்மதியும் பெற்று செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தக்கலை ஞானமாமேதை தர்ஹாவில் 14-நாள்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா காலங்களில் நேர்ச்சை வழங்கப்படுகிறது. இங்கு தரப்படும் எண்ணை மக்கள் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்த தர்ஹாவில் பீர்முஹம்மது அப்பாவின் மூன்று சீடர்களின் சமாதியும் உள்ளது.




செய்தி & படங்கள் வழங்கியவர்,
'புதிய புயல்'
மணவை முருகன்

Post a Comment

Previous News Next News