தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஆண்டு விழா - ஞானபுகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஆண்டு விழா - 
ஞானபுகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது
25-05-2013
தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஆண்டுவிழாவையொட்டி விடிய விடிய ஞானபுகழ்ச்சி பாடுதல் நடைபெற்றது.

ஞானபுகழ்ச்சி உள்பட 18 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு தந்த ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஷாஹிபு ஒலியுல்லா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1–ந் தேதி இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 24–ந் தேதி வரை மவுலிது ஓதுதலும், 16–ந் தேதி முதல் 23–ந் தேதி வரை மார்க்க பேருரைகளும் பீர்முகமது அப்பா அரங்கில் நடைபெற்றது.
நேற்று இரவு 9 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஞானப்புகழ்ச்சி பாடுதல் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி அதிகாலை வரை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்குதல் நடந்தது. நிகழ்ச்சியில் கேரள மாநிலம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.

இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான நேர்ச்சை வழங்குதலும், 27–ந் தேதி மூன்றாம் சிராயத் நேர்ச்சை வழங்குதலும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் என்ஜினீயர் அப்துல் ஜப்பார், துணைத்தலைவர் பீர்முகமது, செயலாளர் முகமது அபூஹனீபா, பொருளாளர் ஹாரிஸ், விழாக்குழு கன்வீனர் பீர்பிர்தவுஸ், செயலாளர் முகமது ஹனீபா, துணை செயலாளர் றைஸ் சுபியான், பொருளாளர் மைதீன் பீர்முகமது உள்பட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
விழாவையொட்டி திருவனந்தபுரம், களியக்காவிளை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Post a Comment

Previous News Next News