மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோவில்
மாசி கொடைவிழா கொடியேற்றக் காட்சி
03-03-2013
மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோவில் மாசி கொடைவிழா 03-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கி 12-03-2013 செவ்வாய்க்கிழமை வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழா கொடியேற்று விழா நிகழ்ச்சி இன்று (03-03-2013) காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள்ள சுபவேளையில் நடைபெற்றது. கொடியேற்று விழா நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர், தமிழக வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், அவரது துணைவியார், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், வெள்ளிமலை ஆசிரம சுவாமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 |
கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டத்தின் ஒருபகுதி |
கொடியேற்று நிகழ்ச்சியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்ற வீடியோ காட்சி