மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில்
திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி
03-03-2013
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி 03-ம் தேதி முதல் துவங்கி வருகிற 12-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நிகழ்ச்சியும், 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு தீபாராதனையும் நிகழ்ந்தது. 
தொடர்ந்து காலை 7.30 முதல் 8.30 மணி வரை திருக்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு மாநாடு கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. மாநாடு கொடியை ஹைந்தவ சேவா சங்க தலைவர் கந்தப்பன் ஏற்றி வைத்தார்.
பக்தி கச்சேரி நடைபெற்ற காட்சி
காலை 9.30 மணிக்கு சமய மாநாடு நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமத் சுவாமி ராமகிருஷ்ணா நந்தஜி மஹாராஜ் பேருரை வழங்கினார்.  பா.ஜ.க துணைத்தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கு  ஏற்றினார். தமிழக வனத்துறை அமைச்சர் சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து பாஜக தலைவர் பொன் இராதாகிருஷ்ணன், நாஞ்சில் முருகேசன், வேலாயுதன், மீனாதேவ் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.
சமய மாநாட்டில் பாஜக துணைத்தலைவர் தமிழிசை
சுந்தர்ராஜன் பேசிய காட்சி
சமய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்
மாலை 6 மணிக்கு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பூஜையும், 3006 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. முதல் திருவிளக்கு ஏற்றிவைப்பவர் சாரதா நடராஜன். இரவு 8 மணிக்கு மாபெரும் பக்தி இன்னிசை நர்த்தன பஜனை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் காணிஞானி தபஸ்வி பொன்காமராஜ் சுவானிகள் நடத்துகிறார்.
பெண்கள் பொங்கலிடும் காட்சி


Post a Comment

Previous News Next News