மணவாளக்குறிச்சி, ஆறான்விளையில்
தெருநாய்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி
07-03-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆறான்விளை பகுதியில் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்த அசன்கண் என்பவரது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களாக இங்குள்ள 4 கோழிகளை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளது. இதுபோல் இப்பகுதியில் வசிக்கும் அஹமது அலி என்பவரது வீட்டில் வளர்த்து வந்த 6 கோழிகளை தெருநாய்கள் பதம் பார்த்து உள்ளன. முன்பெல்லாம் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் தெருநாய்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்தது. தற்போது “ப்ளூ கிராஸ்” அமைப்பினால் அவ்வாறு குறைப்பது தடுக்கப்பட்டது.
இதனால் ஒவ்வொரு பகுதியிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தேங்காய்கூட்டுவிளை பகுதியில் வசிக்கும் சாகுல் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த ஆட்டையும் தெருநாய்கள் கடித்து குதறி உள்ளது. தெருநாய்களின் அட்டகாசத்தை தொடர்ந்து இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடனே நடந்து செல்கின்றனர்.
எனவே பெருகிவரும் தெருநாய்களின் அட்டகாசத்தை, சம்பந்தப்பட்ட துறையினர் தடுக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
செய்தி:- “மணவை மீரான் மைதீன்” சவூதி அரேபியா |
Tags:
மணவை செய்திகள்