மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8–ம் நாள் காட்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 8–ம் நாள் காட்சிகள்
12-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 6–ம் நாள் (10-03-2013)நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

காலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்ற காட்சி
மாநாடு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயனம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு பக்தி பஜனையும், 9 மஹாபாரத தொடர்விளக்க உரையும், 10 மணிக்கு ஹைந்தவா சேவா சங்க சட்ட ஆலோசகர் தலைமையில் சொற்பொழிவு நிகழ்வும் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்வும், மாலை 5 மணிக்கு சாதுக்கள் துறவியர்கள் சங்கமம் நிகழ்வும் நடைபெற்றது.
பக்தி இன்னிசை கச்சேரியில் கலந்து கொண்டவர்களுக்கு
பொன்னாடை அணிவித்த காட்சி
தொடர்ந்து செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை காண...


Post a Comment

Previous News Next News