மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 7–ம் நாள் காட்சிகள்
12-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 6–ம் நாள் (09-03-2013) நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-
காலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
கொல்லம் சுவாமிஜியின் அருள் உரை |
மாநாடு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயனம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு பக்தி பஜனையும், 10 மணிக்கு சாத்தான்விளை கீதை வகுப்பு மாணவிகளின் ஸ்ரீமத் பகவத் கீதை பாராயணம் நிகழ்வும், மாலை 3 மணிக்கு சங்கத்தின் வருடாந்திர கூட்டமும் நடைபெற்றது.
சந்தனகுடங்கள் |
தொடர்ந்து செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை காண...
Tags:
சுற்றுவட்டார செய்திகள்