மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 6–ம் நாள் காட்சிகள்
09-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 6–ம் நாள் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-
காலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு மணிக்கு வலியபடுக்கை (மஹா பூஜை) நடைபெற்றது.
சமய மாநாடு நடைபெற்ற காட்சி |
பக்தி இன்னிசை நடந்த காட்சி |
மாநாடு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயனம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு பக்தி பஜனையும், 10 மணிக்கு மஹாபாரத தொடர் விளக்க உரையும், நடந்தது. பகல் 12 மணிக்கு வெள்ளிமலை பாரதி இளைஞர் இலக்கிய பேரவை வழங்கிய சொல்லரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநாடு நிகழ்ச்சிகளை காண வந்த பக்தர்கள் |
திருவிழா காட்சிகளை தொடர்ந்து படிக்க...
Tags:
சுற்றுவட்டார செய்திகள்