மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 5–ம் நாள் காட்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 5–ம் நாள் காட்சிகள்
08-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 5–ம் நாள் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

காலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடுக்கு சென்ற
பகவதி அம்மன் சிலையுடன் கூடிய அலங்கார வண்டி
மாநாடு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயனம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு பக்தி பஜனையும், 10 மணிக்கு மஹாபாரத தொடர் விளக்க உரையும், நடந்தது. பகல் 12 மணிக்கு சமய மாநாடும், மாலை 3 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், மாலை 5 மணிக்கு இராமாயணத்தில் விஞ்சி நிற்பது சகொதரபாசமே! வீரமே! என்ற தலைப்பில் பக்தி பட்டிமன்றமும் நடைபெற்றது.
யானை மீது களபம் எடுத்து வந்த காட்சி
மேலும் போட்டோஸ் மற்றும் வீடியோ காட்சிகளுக்கு


Post a Comment

Previous News Next News